வெஜிடபிள் தொக்கு
தேவையான பொருட்கள்

காரட் - 2
பீன்ஸ் - 10
காலி ஃப்ளவர் - 1/4 கிண்ணம்
புளி - தேவைக்கேற்ப
மிளகாய்ப் பொடி - 2 மேசை கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
ந. எண்ணெய் - 1/4 கிண்ணம்
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

காய்கறிகளை நறுக்கி சிறிது எண்ணெய்விட்டு வாணலியில் வதக்கிக் கொள்ளவும். புளி, உப்பு ஆகியவற்றை மிக்சியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், தாளித்து அரைத்த விழுதைக் கொட்டி மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி போட்டு நன்றாக வதக்கவும். தண்ணீர் வத்தி வதங்கி எண்ணெய்க் கொதி வரும் போது இறக்கிவிடவும். இதுவும் தொட்டுக் கொள்ள மிகச் சுவையான ஒன்று தான்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com