தேவையான பொருட்கள்
கொத்துமல்லிக் கட்டு - 3 அல்லது 4 புளி - பாதி எலுமிச்சை அளவு மிளகாய் வற்றல் அல்லது பச்சை மிளகாய் - 7 அல்லது 8 கடுகு - 1 தேக்கரண்டி பெருங்காயம் - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப ந. எண்ணெய் - 1/4 கிண்ணம் வெல்லம் - தேவைக்கேற்ப
செய்முறை
கொத்தமல்லியை ஆய்ந்து புளி உப்பு சேர்த்து மிளகாயையும் போட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து பெருங்காயம் போட்டு அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறவும். உளுத்தம் பருப்பும் தாளிக்கலாம். வெல்லம் போட்டு சுருண்டு வரும் போது எடுத்து வைக்கவும். மிளகாய்க்குப் பதில் மிளகாய்ப் பொடி போட்டும் கூட இதனைச் செய்யலாம். இது மிகச் சுவையான தொக்கு. கறிவேப்பிலையிலும் இதே போல் செய்யலாம்.
தங்கம் ராமசாமி |