சிகாகோவில் கிரேசி மோகன்
அக்டோபர் 9, 2004 அன்று சிகாகோ லெமாண்ட் கோவில் அரங்கில் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் கிரேசி மோகனின் 'கிரேசி கோஸ்ட்' நகைச்சுவை நாடகம் நடந்தது.

கதாநாயகன் மாதுவின் வீட்டில் பேய்த் தொல்லை. கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக அவர் பேய்கைள விரட்ட கிரேசி மோகனை (மாத்ரூபூதம்) ஏற்பாடு செய்த அதே நேரத்தில் மாதுவின் நண்பரின் ஆவி அங்கு குடியேறுகிறது. அந்த ஆவியின் நிறைவேறாத ஆசையை மாது நிறை வேற்றினாரா என்பதுதான் நாடகம். அமெரிக்க ரசிகர்களுக்காக நிறைய வசனம் எழுதி அமர்க்களப்படுத்திவிட்டார்கள். 12 பேர்கொண்ட நாடகக்குழுவினர் சுமார் 30 நாடகங்களை வடஅமெரிக்காவின் பல பகுதிகளில் நிகழ்த்தினார்கள்.

இடைவேளைக்குப் பிறகு 'கிரேசி' மோகனுடன் நடந்த நேருக்குநேர் நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. விதவிதமாக நிகழ்ச்சிகளை வழங்கும் சிகாகோ தமிழ் சங்கத்தினர் இந்த நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்து அமர்க்களப்படுத்திவிட்டார்கள். சங்கத்தின் நிகழ்ச்சிகள் பற்றி அறியத் தொடர்புகொள்ளவெண்டிய தொலைபேசி எண்கள்:
முத்து செல்வராஜ்: 847.498.2152
கடலூர் குமார்: 630.230.0052
ராம் ரகுராமன்: 815.436.3133

ஜோலியட் ரகு

© TamilOnline.com