இலங்கையில் தயாரான மண்
'மாற்று', 'கனவுகள் நிஜமானால்' என்ற இரண்டு குறும்படங்களை இயக்கிய புதியவன் இயக்கத்தில் வருகிறது 'மண்'. சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு இலங்கையில் தயாரான தமிழ் படம் என்கிற
பெருமையை பெருகிறது 'மண்'.

சினி ரேஞ்ச் பிலிம்ஸ் படநிறுவனத்தின் சார்பின் ராஜ் கஜேந்திரா தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக விஜித் என்ற புதுமுகம் நடிக்கிறார். நாயகியாக இலங்கை மட்டகளப்பை சேர்ந்த பள்ளி மாணவி
ஷானா நடித்திருக்கிறார்.

இப்படத்தில் வாகை சந்திரசேகர் மற்றும் 'காதல்'சுகுமார் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பல ஆல்பங்களுக்கு இசை அமைத்த ஜெர்மன் விஜய் படத்திற்கான இசையை
அமைக்க, இப்படத்திற்கான கதை, வசனம், இயக்கத்தை கவனிக்கிறார் புதியவன்.

இலங்கையில் உள்ள வன்னி பகுதியில் உள்ள கனகராயன்குளம் என்ற தமிழ் கிராமத்தில் நடைபெறும் கிராமத்து காதல் கதையே 'மண்'.

இலங்கையில் கடைசியாக தயாரான தமிழ் படம் 'சர்மிளாவின் இதயராகம்' என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com