மனிதனும் சிங்கமும்
The Man and the Lion

A man and met a lion while traveling through a forest. They walked some distance together.
காட்டுவழியே சென்றுகொண்டிருந்த ஒரு மனிதன் ஒரு சிங்கத்தைச் சந்தித்தான். இருவரும் சிறிது தூரம் ஒன்றாக நடந்து சென்றார்கள்.

Soon each began to boast of their respective superiority in strength and prowess.

விரைவிலேயே இருவரும் அவரவர் பலத்தையும் திறமையையும் பற்றிப் பெருமைபேசத் தொடங்கினார்கள்.

On the way, they passed a statue which represented a lion tamed by a man. The traveler said: "How strong humans are! We are perfectly capable of taming even the King of the Forest."

போகும் வழியில் ஒரு சிங்கத்தை ஒரு மனிதன் அடக்குவது போன்ற சிலை ஒன்று இருந்தது. அந்தப் பயணி, "மனிதர்கள் எத்தனை வலிமையானவர்கள்! எங்களால் காட்டு ராஜாவைக்கூட அடக்கிவிட முடியும்" என்றான்.

The Lion replied, "This statue was made by someone like you. If lions were to carve statues, it will be about a man gored by a lion."

"இதை உன்னைப் போன்ற ஒரு மனிதன் செய்திருக்கிறான். ஒருவேளை சிங்கங்கள் சிலை வடிக்கத் தொடங்கினால், அது மனிதனைச் சிங்கம் கொல்லுவதைப் போல இருக்கும்" என்றது.

Every coin has two sides.

ஒவ்வாரு நாணயத்துக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு.

© TamilOnline.com