வித்தியாசமான வேடத்தில் வடிவேலு
கேரளாவில் சக்கைப் போடு போட்ட 'சி.ஐ.டி மூசா' தமிழில் 'சீனா தானா 001' என்கிற பெயரில் மிட்வேலி என்டர்டைன்மெண்ட் தயாரித்து வழங்கவிருக்கிறது.

வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க பிரசன்னா கதாநாயகனாக நடிக்கிறார். புதுமுகம் ஒருவர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மணிவண்ணன், ரியாஸ்கான், டெல்லிகணேஷ், நிழல்கள்
ரவி ஆகியோர் நடிக்கிறார்கள்.

தேவா இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டி.பி. கஜேந்திரன்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com