அவசரச் சமையல் - அவல் உப்புமா
தேவையான பொருட்கள்

அவல் - 1 கிண்ணம்
சமையல் எண்ணெய் - 2 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - 1/8 கிண்ணம்
உறைந்த காய்கறிக் கலவை - 1/4 கிண்ணம்
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி

செய்முறை

அவலைத் தண்ணீரில் கழுவி, நீரை இறுத்து 5 நிமிடங்கள் வைக்கவும். அடிபிடிக்காத அல்லது அடி கனமான பாத்திரத்தில் சமையல் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக்கொண்டு பச்சை மிளகாய், இஞ்சி போட்டு சற்று வதக்கவும். தண்ணீரை இறுத்து வைத்துள்ள அவல் இப்போது பொலபொல என்று இருக்கும். இதைச் சேர்த்து ஒன்றுசேரக் கிளறி இறக்கவும்.

பின் குறிப்பு:

மசாலா வாசனை பிடித்தவர்கள் உப்புடன் 1/4 தேக்கரண்டி மசாலாப் பொடி சேர்த்துக் கொள்ளலாம். முதல் நாள் இரவே காய்கறிக் கலவையை உறைகுளிர்அறையிலிருந்து (Freezer) குளிர்சாதனப் பகுதியில் எடுத்து வைத்துக் கொண்டால் காய்கறி வேகும் நேரம் மிச்சப்படும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com