உலகத் தமிழ் அமைப்பின் மாநாடு (WTO - World Tamil Organization)
டிசம்பர் 11, 2004. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் நடக்கும் இந்த அமைப்பின் மாநாடு இந்த முறை நியூ ஜெர்சியில் நடந்தது. சிறப்பு விருந்தினராக இடது கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளரும், குறைந்தபட்சச் செயல் திட்டத்தின் (CMP) உறுப்பினருமான ராஜாவும், பொருளாதார நிபுணரான பேரா. நாகநாதனும் கலந்துகொண்டார்கள். தமிழ்ப் பெண்களின் இன்றைய நிலை, தமிழ் நாட்டில் தாய்த் தமிழ்ப் பள்ளிகள், நதி நீர் இணைப்பு போன்ற தலைப்புகளில் உரையாற்றினார்கள். இலங்கைத் தமிழர்கள் மற்றும் ஈழப் பெண்களின் நிலை பற்றியும், ஈழ மறு வாழ்வு பற்றியும் உரையாற்றினார்கள்.



© TamilOnline.com