குறும்படங்களின் மூலம் சமூக மாற்றங்கள் - கலந்துரையாடல்
நவம்பர் 14, 2004. ரேவதி ராதாகிருஷ்ணன் ஓர் எழுத்தாளர், குறும்பட இயக்குனர், முற்போக்குச் சிந்தனையாளர், BBC மற்றும் பல தமிழ்ச் சானல்களில் நிருபராகப் பணியாற்றியிருக்கிறார். விருமாண்டி, காக்க காக்க ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். New York Independent Film and Video Festival நிகழ்ச்சியில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டத் இவரது குறும்படமான 'உங்களில் ஒருத்தி' யை வாசிங்டன் டிசி தமிழர்கள் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவருடன் ஒரு கலந்துரையாடல் நடந்தது. இளம் பெண்ணான ரேவதியின் ஆர்வமும், திறமையும், பளிச்சென்ற பேச்சும், தனது குறும்படங்களின் மூலம் சமூக விழிப் புணர்வை ஏற்படுத்த விரும்பும் உயர்ந்த எண்ணமும் அனைவரையும் கவர்ந்தது.

தாரா வாஷிங்டன் டி.சி.

© TamilOnline.com