நவம்பர் 14, 2004. மங்கை (பத்மா வெங்கட்ராமன்) ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர். UCLA வில் Fulbright Scholar. பாரம்பரியமான நாடகக் கலை¨யின் அடிப்படையில் பல எழுச்சிமிக்க தமிழ் நாடகங்களை இயக்கி யிருக்கிறார். உதாரணத்திற்கு சுவடுகள், பச்ச மண்ணு, இன்குலாபின் அவ்வை மற்றும் மணிமேகலை போன்ற நாடகங்களைச் சொல்லலாம். 20 பேர் பங்குபெற்ற அவரது நாடகப் பட்டறையில் அவருடைய திறமையான இயக்கத்தின் மூலம் அனை வரது நடிக்கும் திறனையும் வெளியே கொண்டுவந்தார்.
ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருந்த நடிகரையும், இயக்குனரையும் அன்று அடையாளம் கண்டுகொண்ட குழுவினர்கள் மங்கையை மகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள். அனைவருக்கும் இது ஒரு வித்தியாச மான அனுபவமாக இருந்தது. |