அக்டோபர் 23, 2004 அன்று டியர்போர்ன், மிச்சிகனில் 'ஆசியாவின் வண்ணங்கள்' (Colors of Asia) என்ற நிகழ்ச்சி நடத்தப் பெற்றது. சீனாவின் மங்கோலிய நடனம் மற்றும் கைக்குட்டை நடனம், ஜப்பானிய கோடோ மற்றும் ஷாகுஹச்சி ஆகியவற்றைக் காணமுடிந்தது. ஆனாலும் டெட்ராயிட்டைச் சேர்ந்த மிச்சிகன் பீட்ஸ் என்ற இளம் இந்தியக் கலைஞர்களின் கலவைக் கருவியிசை எல்லோரின் மனதையும் கவர்ந்தது. www.miindia.com என்னும் முன்னோடிச் சமுதாய வலைத்தளம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டிய மயூரி சுதா சந்திரன் கலையுலகப் பங்களிப்புக்கும், நரேந்திர சேத் சமூகப் பணிக்காகவும் பாராட்டப் பட்டனர். மிச்சிகனில் இருக்கும் சிறாரின் திறமைகளை வெளிக்கொணர ஒரு போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டைம்லர் கிரைஸ்லர், இன்டஸ் மார்ட்கேஜ் மற்றும் AAA மிச்சிகன் அமைப்புகள் நிகழ்ச்சிக்கு ஆதரவு தந்தன.
"ஆசியச் சமுதாயத்தை ஒன்று சேர்ப்பதற்கு இந்த நிகழ்ச்சியை உருவாக்கினோம்" என்கிறார் miindia.comஇன் அனுபமா கோபாலகிருஷ்ணன். |