மிச்சிகனில் அம்மா
நாடு, மொழி, மதம், இனம் கடந்து அன்பாலே அரவணைக்கும் அமிர்தானந்த மயி என்கிற அம்மா அவர்கள் மிச்சிகனுக் குத் தொடர்ந்த ஆறாவது ஆண்டாக நவம்பர் 24 முதல் 29 வரை விஜயம் செய்தார்கள். அமெரிக்கா முழுதிலிருந்தும் மட்டுமல்லாமல் கனடாவிலிருந்தும் ஆகமொத்தம் சுமார் 10000 பேர் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டனர். ஞாயிற்றுகிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கிய கடைசி நாள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த 5000 பேரையும் அம்மா சந்தித்து முடிக்கும்போது திங்கள் கிழமை காலை 9.30 ஆகிவிட்டது.

ஓய்வுபெற்ற செனட்டர் லேரி பிரெஸ்லர் மற்றும் மிச்சிகனில் உள்ள பல்வேறு சங்கங்களும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பல்வேறு மொழிகளில் அம்மாவும், பக்தர் களும் பாடிய பஜனைப் பாடல்களும், உரைகளுமாக ஒரு பேரானந்த வைபவமாக இருந்தது ஐந்து நாட்களும். தவிர ஒதுக்கத்தில் (retreat) 'ஒருங்கிணைந்த அமிர்தா தியானம்', பஜனை வகுப்புகளோடு அம்மாவின் கையால் பரிமாறிய உணவும் இருந்தது.

அம்மாவின் அருளுரைகளைத் தாங்கிவரும் இலவச மின்னிதழனான அமிர்தவாணியைப் பெற, மின்னஞ்சலில் Subscribe என்ற செய்தியை amritavani@amritapuri.org என்ற முகவரிக்கு அனுப்பவும்.

தமிழ் உட்படப் பல மொழிகளிலும் வெளிவரும் மாத இதழான 'மாத்ருவாணி' பற்றி அறிய: matruvani@amritapuri.org

அதிக விவரங்களுக்கு: www.amritapuri.org

அரவிந்த்

© TamilOnline.com