ஆப்பிள் பஜ்ஜி
தேவையான பொருள்கள்

ஆப்பிள் (காயாக) - 2
கடலைமாவு - 1 கிண்ணம்
அரிசி மாவு - 1/2 கிண்ணம்
காரப்பொடி - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

ஆப்பிளை பஜ்ஜிக்கு நறுக்குவது போன்ற வடிவில் நறுக்கவும். கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, காரப்பொடி, பெருங்காயம் போட்டு பஜ்ஜி மாவு கரைத்து அதில் ஆப்பிள் துண்டுகளைத் தோய்த்து
எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.

இது ஒரு வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com