தேவையான பொருள்கள்
ஆப்பிள் - 4 உருளைக் கிழங்கு - 2 பிரட் கிரம்ஸ் - கொஞ்சம் பச்சை மிளகாய் - 4 (பொடியாய் நறுக்கியது) உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை
ஆப்பிளைத் தோல் சீவி கொப்பரைத் துருவியில் துருவிக் கொள்ளவும்.
உருளைகிழங்கை வேகவிட்டு ஆப்பிளுடன் சேர்த்து உப்பு, சாட் மசாலா, கரம் மசாலா, பச்சை மிளகாய் இவற்றுடன் கொத்துமல்லியும் போட்டுக் கெட்டியாகப் பிசைந்து கட்லெட் மாதிரி பிரட் கிரெம்ஸில் புரட்டி தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு அதில் போட்டு இருபுறமும் சிவக்க விட்டு எடுக்கவும். இதுவும் சுவையான சிற்றுண்டி.
தங்கம் ராமசாமி |