ஆப்பிள் சமூசா
தேவையான பொருள்கள்

ஆப்பிள் - 6
சர்க்கரை - 1/2 கிண்ணம்
ஏலக்காய் - 4
கிராம்பு - 3
நெய் - 2 தேக்கரண்டி
மைதா மாவு - 2 கிண்ணம்
அரிசி மாவு - 1/2 கிண்ணம்
உப்பு - சிட்டிகை

செய்முறை

ஆப்பிளைத் தோல்சீவி கொப்பைரத் துருவலில் சீவிக் கொள்ளவும். ஏலக்காய், கிராம்பு, சிறிது வாணலியில் பிரட்டிப் பொடி செய்து போடவும். சர்க்கரை கெட்டிப் பாகு தயார் செய்து வைத்து

ஆப்பிளைக் கொட்டி கெட்டியாகப் பூரணம் செய்து கொள்ளவும்.

மைதா, அரிசி மாவைச் சிட்டிகை உப்புப் போட்டு நெய் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து கொண்டு சிறு சிறு அப்பளம் போல் இட்டு நடுவில் ஆப்பிள் பூரணம் வைத்து நன்றாக மூடி பேக் செய்யலாம்.

அல்லது எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம்.

பூரணம் தளர்வாக இருந்தால் கொஞ்சம் அரிசி மாவு போட்டு கெட்டியாக செய்து கொள்ளலாம். இதுவும் சுவையான ஒரு சிற்றுண்டி.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com