ஸ்ருதி ஸ்வர லயாவின் 'எம்.எஸ்ஸுக்கு அஞ்சலி'
ஜனவரி 15, 2005 அன்று ஸ்ருதி ஸ்வர லயா (·ப்ரீமாண்ட்) மறைந்த இசைமேதை எம்.எஸ். அவர்களுக்கு ஒரு இசையஞ்சலி நிகழ்ச்சியை நடத்தியது. இசைப்பள்ளியின் இயக்குநர் அனு சுரேஷின் கச்சேரியோடு நிகழ்ச்சி துவங்கியது. இவர் எம்.எஸ்ஸின் மகளான ராதா விஸ்வநாதனின் சிஷ்யை ஆவார். கச்சேரிக்கு ரவி ஸ்ரீதரன் மிருதங்கம் வாசித்தார்.

கௌளையில் அமைந்த 'ஸ்ரீ மஹா கணபதி' முதல் பாடலாக அமைந்தது. அடுத்து ஸ்ரீ ராகத்தில் 'வந்தே வாசுதேவம்', சுத்த தன்யாசியில் 'நரவன' ஆகிய பாடல்களைப் பாடினார். இடை யில் மானசா சுரேஷ் 'சோ பில்லு சப்தஸ்வர'வால் எல்லோர் மனத்தையும் அள்ளினார். பின்னர் இருவரு மாக 'நீ இரங்காயெனில்', 'ரங்கபுர விஹாரா' ஆகியவற்றைப் பாடினர். 'காற்றினிலே வரும் கீதம்' பாடாமல் எம்.எஸ் ஸ¤க்கு அஞ்சலியா? அனுவும் மானசாவும் இணைந்தே அதையும் பாடினர். 'ஹரி துமஹரோ' என்ற மீராபஜன் பாடலுடன் தன் கச்சேரியை நிறைவுசெய்தார் அனு சுரேஷ்.

பின்னர் பத்மா ராஜகோபாலன் ('என்ன கனி ராம பஜனே'), கீதா சேஷாத்ரி (பஜனைப் பாடல்), மாணவர்கள் பாடிய 'அருள் புரிவாய்', 'கற்பக வினாயக', 'தேவதேவம் பஜே', 'க்ஷ£ராப்தி கன்யகக்கு' மற்றும் மீரா பஜன் பாடல்கள் இடம்பெற்றன. பிரசன்னா, கவுசல்யா, அழகு, ப்ரியா, வினோதினி, கீர்த்தனா, அனிதா, தாரிகா, ரம்யா, பிரித்வி, நிஷா, உமா, அனிருத், ஹரி குட்டிவேலி, வைத்யா, நிஷேவிதா, ஹரி சுரேஷ் ஆகிய மாணவர்கள் பாடல் வழங்கினர். மாதுரி, ப்ரியா, ஜெய் மற்றும் கீர்த்தனா போன்ற வளர்ச்சியடைந்த மாணவர்கள் 'தேவம் பஜே' பாடலைப் பாடினர்.

கணேச பஞ்சரத்னம், ஹனுமான் சாலிஸா, 'குறை ஒன்றும் இல்லை', 'மைத்ரீம் பஜத' ஆகிய பாடல்களைச் சேர்ந்திசையாக வழங்கியபோது, பார்வையாளர்களும் இணைந்து பாடினர். எம்.எஸ். நடித்த 'பக்த மீரா' படத்திலிருந்து சில காட்சிகள் திரையிடப்பட்டன.

ஸ்ருதி ஸ்வர லயா பிரதி ஆண்டும் செப்டம்பர் மாதத்தை எம்.எஸ். அவர்களுக்கு அர்ப்பணிக்கும் என்றும், அப்போது அவர் பாடிய பாடல்கள் பாடப்படும் என்றும் அறிவித்தனர்.

© TamilOnline.com