ஆப்பிள் தொக்கு
தேவையான பொருள்கள்

ஆப்பிள் - 4
மிளகாய்ப் பொடி - 4 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 பெரிய கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

ஆப்பிளைத் தோல் சீவி கொப்பரைத் துருவியில் சீவி உப்புக் கலந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு பெருங்காயம் தாளித்து துண்டுகளைப் போட்டு காரப்பொடி, மஞ்சள்பொடி போட்டு நன்றாக வதக்கவும். ஆப்பிள் வெந்து மிளகாய்பொடி வாசனை போய் சுருண்டு வரும் போது இறக்கி உபயோகிக்கவும். இது ஜோராக இருக்கும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com