சுவாமி சுகபோதானந்தாவின் கீதைச் சொற்பொழிவுகள்
·பெப்ருவரி 4-6, 2005 நாட்களில் சுவாமி சுகபோதானந்தா கலிபோர்னியா வளை குடாப் பகுதியில் பகவத் கீதைச் சொற் பொழிவுகள் நடத்த இருக்கிறார். முதல் இரண்டு நாட்களிலும் சன்னிவேலில் உள்ள கோமள விலாஸிலும், 6ஆம் தேதியன்று கேம்பெல்லில் உள்ள சமுதாயக் கூடத்திலும் நடக்கும். மூன்று நாட்களிலும் மாலை 7:30 முதல் 6:30 மணிவரை சொற்பொழிவு நடைபெறும். அனுமதி இலவசம். கடந்த பல வருடங்களாக சுவாமி சுகபோதானந்தா தனது LIFE - Living In Freedom, an Enquiry பயிலரங்குகளைக் கலிபோர்னியா வளை குடாப் பகுதியில் நடத்தி வருகிறார் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

சுவாமி தயானந்தா, சுவாமி சின்மயானந்தா என்று பலரிடம் சீடராக இருந்தார் சுகபோதானந்தா. ஆரம்பத்தில் இமயமலைச் சாரலில் பல வருடங்கள் அறிவுப் பசியோடு அலைந்து திரிந்தார். துறவறம் ஏற்று கீதைச் சொற்பொழிவு கொடுக்க ஆரம்பித்த போது, இளைஞர்கள் பங்கெடுப்பது மிகக் குறைவாக இருக்கவே, கீதையின் சாரத்தை அடிப்படையாகக் கொண்ட LIFE பயிலரங்கை வடிவமைத்தார். கடந்த இருபத்தைந்து வருடங்களாக LIFE, Harmony and Creativity at work, Relationship workshop என்று பல பயிலரங்குகளைப் பல நாடுகளில் நடத்தி, ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொட்டிருக்கிறார். பல பெரிய நிறுவனங்கள் அவரை அழைத்துத் தமது உயரதிகாரிகள் மற்றும் குடும்பத்தினரிடம் பயிலரங்கு நடத்தச் சொல்கின்றன. 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' உட்பட்ட அவரது பல புத்தகங்கள் லட்சக் கணக்கில் பல மொழிகளில் விற்பனை ஆகின்றன. இந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடந்த உலகப் பொருளா தாரப் பேரவை (World economic Forum)யில் சுவாமிஜி, சிறப்பு விருந்தினராக இரண்டாவது முறையாக கலந்து கொண்டார்.

இருபத்தைந்து வருடங்களுக்குப் பின், கடந்த ஆண்டு கீதைச் சொற்பொழிவு இந்தியாவின் பல இடங்களில் நடந்த போது, ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

"இன்றைய நமது நாகரீக வாழ்க்கையின் குழப்பங்களைத் தீர்ப்பதில் பகவத் கீதையின் பங்கு என்ன. உலகத்தில் உறவுகள், உதாரணத்திற்கு கணவன்-மனைவி, முதலாளி-தொழிலாளி உறவுகள், சமுதாயம், அரசியலில் - ஆசைகள், கொள்கைகள் (values), உணர்வுகள் - இவைகள் ஒரு போர்க்களம் போன்று இருக்கின்றன. ஒருமித்த, புதிய வழிகளில் இதற்கு எப்படித் தீர்வு காணலாம் என்பதை ஞானம் நிரம்பிய கிருஷ்ண பகவானின் பகவத் கீதை எப்படி விளக்குகிறது?" என்று தனது சொற்பொழிவு தொட்டுக்காட்டும் என்கிறார் சுகபோதானந்தா.

"நமது நல்ல எண்ணங்கள் பாண்டவர்களையும், தீய எண்ணங்கள் கௌரவர்களையும், எண்ணங்கள் நிரம்பிய நம் மனது போர்க்களத்தையும் குறிக்கின்றது. நமது நல்ல எண்ணங்களை, ஞான ஒளிகொண்ட கிருஷ்ண பகவானுக்கு அர்ப்பணிப்பதால் அவை எண்ணிக்கையில் சொற்பமாக இருந்தாலும், தீய எண்ணங்களை முறி யடித்து, வாழ்க்கையில் வெற்றி அடைவோம். இதை விளக்கமாக இந்த மூன்று நாள் உரையில் நாம் பார்க்கப் போகிறோம்" என்று மேலும் கூறுகிறார்.

சுவாமிஜியின் பிரசன்னா டிரஸ்ட், பெங்களூரில் தாய் தந்தையர் ஆதரவு இல்லாத இருபத்தைந்து பெண் குழந்தைகள் படிக்கும் ஆசிரமத்தை நடத்தி வருகிறது.

கோரமங்களாவில் 'நிர்குண மந்திர்' என்ற தியான மையத்தை நிறுவி, இலவச யோகம், பகவத் கீதை, வழிகாட்டல் வகுப்புகள் நடத்தி வருகிறது. இப்போது புதிதாக சுவாமிஜியோடு தங்கிப் படிக்க 'Vedic center' என்ற அமைப்பும் உருவாகி வருகிறது. இந்திய மற்றும் வெளிநாட்டு இளைஞர்களுக்கு, வேதாந்த சாரத்தை அடிப்படையாகக் கொண்ட, business and administation management கல்வியைத் தருவது இதன் நோக்கம்.

சுவாமிஜியைப் பற்றி மேலும் அறிய: www.swamisukhabodhananda.org

சுவாமிஜியின் சொற்பொழிவுகள் Astha channelஇல் பிரதி திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் இரவு 8 மணிக்கும், Gemini channelஇல் பிரதி திங்கள் கிழமை காலை 6.30 PST) மணிக்கும் அமெரிக்காவில் ஒளி பரப்பாகின்றன.

கீதை சொற்பொழிவு விபரங்கள்:
February 4th 7.30-9.30PM
Komala Vilas Party Hall,
1020 E El Camino Real
Sunnyvale, CA

February 5th and 6th: 7.30-9.30PM
Campbell Community Center, Multipurpose Hall
(#M50) 1 W Campbell Ave
Campbell, CA

மேலும் விபரமறிய:
Mahi - 408.314.7869
Bhaskar - 510.656.5773
Kamala, Ram - 408.205.7035

சுவாமிஜியின் அமெரிக்கச் சுற்றுப் பயணத்தின் போது உங்கள் ஊரில் பயிலரங்குகள் நடத்த வேண்டுமா? விபரங்களுக்கு toshakila@yahoo.com, prmadhav@vsnl.com என்ற இரண்டு விலாசங்களுக்கும் மின்னஞ்சல் செய்யுங்கள்.

N. ஷகிலா பானு

© TamilOnline.com