தெரியுமா?
வலம் வரும் ஆதிபராசக்தி

செஸ்டர் ஸ்பிரிங்ஸ் (பென்சில்வேனியா) நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் நிறுவுவதற்கான கருவறை அம்மனின் திருவுருவச் சிலை வட அமெரிக்காவில் கிழக்கு, மத்திய மேற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் கரிகோலம் சென்றுகொண்டிருக்கிறது.

இது மூலஸ்தான மூர்த்தியே என்பதையும், உற்சவ மூர்த்தியல்ல என்பதையும் கவனிக்கவேண்டும். இந்தக் கரிகோலத்தின் போது அன்னையைத் தமது இல்லத்துக்கு அழைக்கிறவர்கள் தம் கரங்களினாலேயே ஐந்து வகை அபிஷேகம், அலங்காரம், குங்கும அர்ச்சனை செய்யும் அரிய வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

பராசக்தி அன்னையின் கரிகோலப் பயணம் ஏப்ரல், 2005 வரை கலி·போர்னியா மாநிலத்தில் நடைபெறும். தம் இல்லத்தில் ஆராதனை செய்ய விரும்புபவர்கள் தொடர்புகொள்ள:

San Francisco Bay Area:
Sivakumari Duraisamy 510.791.8795
Uma Maheshkumar 510.745.9770
Revathi Selvakumar 510.324.8048
Jeyanthi Ramesh 510.475.0301

Los Angeles:
Kasthuri Rangan 818.398.8896

******


திறந்தவெளி குளிர்ப்பெட்டி!

நாங்கள் டிசம்பர் மாதம் கெண்டக்கி மாநிலத்தில் ஒரு சிற்றூரில் வசிக்கும் எங்கள் நண்பர் வீட்டிற்குப் போயிருந்தோம். வீடு, மலைப் பிரதேசத்தில் நிறைய மரங்கள் சூழ இருந்தது. கடும் குளிர்காலம். வீட்டைச் சுற்றி நிறைய இடம். பனி இரண்டடிக்கு மேல் விழுந்திருந்தது. நடைபாதைகளிலிருந்து அடிக்கடி பனித்துகள்களை அகற்றிக் கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் கோழி, இறைச்சி, தக்காளி என்று தமிழில் எழுதின பெயர்ப் பலகைகள் கட்டையில் பொருத்தப்பட்டு பனிக்குவியலில் நட்டிருந்தன. இது என்ன என்று கேட்டேன்.

அதிக உணவுப் பொருட்களைக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க இடமிருப்பதில்லை. அவற்றைப் பிளாஸ்டிக் பைகளில் பொதித்து பனியடுக்கத்தில் குழி தோண்டிப் புதைத்து வைத்து மூடிவிடுகிறார்கள். எது எங்கு உள்ளது என்பது அறிய தமிழில் பெயர்ப் பலகை!

தம்பதியர் டாக்டர்கள். அவர்களிடம் சிசிச்சைக்காக வரும் அந்த ஊர்க்காரர்கள் பணமாகத் தராமல், பழைய பண்டமாற்று முறையில் கோழி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் என்று தருகிறார்கள். சூழ்நிலைக்கேற்ப அவர்கள் வாழும் விதம் வேடிக்கையாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.

கே. என். சரோஜா.

******


தமிழமுதம் ஒலிபரப்பு துவங்கிவிட்டது

டெட்ராயிட்டிலிருந்து 1460AM அலை வரிசையில் தமிழமுதம் ஜனவரி 16, 2005லிருந்து ஒலிபரப்பாகத் தொடங்கிவிட்டது. ஞாயிறுதோறும் மாலை 5:00 முதல் 6:00 வரை (EST) தமிழ் நிகழ்ச்சிகள் இதில் ஒலிபரப்பாகும். முந்தைய நிகழ்ச்சிகளை இணையம் வழியே கேட்க www.tamilamudham.com

அர்விந்த் கே. ரமேஷ்

© TamilOnline.com