க்ரியா வழங்கும் சுருதி பேதம்
பல நல்ல மேடை நாடகங்களை அளித்து ரசிகர்களை மகிழ்விக்கும் அதே வேளையில், அவர் களைத் தங்கள் வேர்களுடன் இணைக்கும் விதமான நாடகங்களை வழங்குவதைத் தன் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது க்ரியா.

க்ரியா நாடகக்குழு இதுவரை வழங்கிய 'தனிமை', 'மாயா' போன்ற நாடகங்கள் வடஅமெரிக்கத் தமிழ் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப் பெற்று, பலத்த வரவேற்பைப் பெற்றவை. அந்த வரிசையில் க்ரியா உருவாக்கி வரும் அடுத்த மேடை நாடகம், ஆனந்த் ராகவ் எழுதி, தீபா ராமானுஜம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் சுருதி பேதம்.

ஒரு கலைக்குடும்பத்தில் ஏற்படும் சுருதி பேதத்தை மேடை நாடகமாக அரங்கேற்ற உள்ளனர் க்ரியா குழுவினர்.

சுருதி சுத்தமாகக் கச்சேரி செய்து புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் வாழ்வில் சுருதி சேர்ந்ததா, இனிய ராகம் பிறந்ததா என்னும் கேள்வியை புகழின் உச்சியில் இருக்கும் ஒரு இசைக் குயிலின் வாழ்வின் வழியே அலசுகிறது சுருதி பேதம்.

க்ரியா நாடக நிறுவனத்தின் நிறுவனரும், இயக்குனருமான தீபா ராமானுஜம், தமிழ் மேடை நாடகங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நீண்ட அனுபவம் உடையவர். இயக்குனர் இமயம் பாலச்சந்தரின் பள்ளியில் நடிப்புக் கலை பயின்றவர். பிரபல மஹாலக்ஷ்மி பெண்கள் நாடகக் குழுவில் பாம்பே ஞானத்தின் இயக்கத்தில் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளவர். இவர் இயக்கி, நடித்த நாடகங்கள் கதையமைப்பு, தேர்ந்த நடிப்பு மற்றும் சிறப்பான மேடையுத்திகளுக்காக வரவேற்கப்பட்டன. தீபா ·ப்ரீ மாண்ட்டில் உள்ள திரை மற்றும் நாடகக் கலைக்குப் புகழ் பெற்ற ஓ·லோனி கல்லூரியின் மேடைநாடகம்/திரைப்படத் துறையில் பயிற்சி பெற்று வருகிறார்.

தமிழகத்தின் புகழ்பெற்ற இளந்தலை முறை எழுத்தாளர்களில் ஒருவராகிய ஆனந்த் ராகவ். முன்னர் இவரது 'தனிமை'யைக் க்ரியா அரங்கேற்றியுள்ளது.

ஆனந்த் ராகவின் சிறுகதைகள், தமிழகத்தின் பிரபலப் பத்திரிகைகளான கல்கி, குமுதம், விகடன், கலைமகள்,அமுதசுரபி, திண்ணை ஆகியவற்றிலும் கடந்த சில வருடங்களாக ஆனந்த விகடன் தீபாவளி மலரிலும் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. பாங்காக்கில் வாழும் ஆனந்த் நவீன இலக்கியத்துக்கு மெருகேற்றி வரும் எழுத்தாளர். அன்றாட மனித வாழ்க்கை யில், மனிதர்களிடம் நிலவும் நுட்பமான உணர்வுகளையும் நேர்த்தியாகப் பதிவு செய்பவர். அவரது படைப்புக் களின் உணர்வுகளைச் சிறிதும் குலையா மல் மேடையேற்றுபவர்கள் க்ரியா குழுவினர். இந்த வெற்றிக் கூட்டணியில் மற்றுமொரு படைப்பு சுருதி பேதம்.

நாடகத்தின் கதை ஐம்பது ஆண்டுகள் காலக்கட்டத்தில் நடப்பதால், பாத்திரங்களின் தோற்றத்தையும், அவர்களின் பாவனைகளையும் புதுமையான விதத்தில் ஒப்பனைக் கலை நுணுக்கங்கள் மூலமாக வேறுபடுத்திக் காட்டவிருக்கிறார் தீபா.

இந்த நாடகம் AID நிறுவனத்திற்காக நிதி திரட்டும் முயற்சியாகும்.

மேலும் விவரங்களுக்கு:
www.aidinida.org
நாடகம்: சுருதி பேதம்

நாள்: பிப்ரவரி 26, 2005
(இரண்டு காட்சிகள்)

நேரம்: பிற்பகல் 2 மணி,
மாலை 6 மணி

இடம்: கபர்லி கலையரங்கம்,
பாலோ ஆல்டோ

நுழைவுச் சீட்டு: $12

முன்பதிவு மற்றும் மேலதிக விபரங்களுக்கு:
www.kreacreations.com

மின்வலையில் சீட்டு வாங்க: www.sulekha.com/bayarea

தொடர்புகொள்க:
நவின் நாதன் - 510.435.5034
ராமானுஜம் - 510.353.1790
வேணு சுப்ரமணியம்- 510.579.7541
ஸ்ரீதர் - 408.626.4245

© TamilOnline.com