ஆப்பிள் டிலைட்
தேவையான பொருட்கள்

ஆப்பிள் - 6
சர்க்கரை - 1 1/2 கிண்ணம்
பிரட் க்ரம்ஸ் - 1 கிண்ணம்
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
கஸ்டர்ட் பவுடர் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை

ஆப்பிளைத் தோல் சீவி நறுக்கி எடுத்துக் கொள்ளவும். உப்புத் தண்ணீருடன் மிக்சியில் இட்டு அரைத்து எடுத்துக் கொண்டு, அடுப்பில் லேசாகக் காய்ச்சிக் கூழ் போல் செய்யவும்.

சர்க்கரையை அடுப்பில் வைத்து பாகு போலக் காயும் போது வெண்ணையும், பிரட் க்ரம்ஸ் போட்டு கஸ்டர்ட் பவுடரும் போட்டு எடுத்துக் கொண்டு ஒரு தட்டில் சர்க்கரைக் கூழ் ஒரு கரண்டி விட்டுப்
பரவலாக்கி மேலாக ஆப்பிள் கூழ் ஊற்றவும். திரும்ப சர்க்கரை பிரட் க்ரம்ஸ் கூழ் ஊற்றிப் பரத்தி மேலாக ஆப்பிள் கூழ் ஊற்றவும். மாற்றி மாற்றி இரண்டு தடவை ஊற்றி சிறிது சூடு வரும் வரை
மைக்ரோ வேவில் அல்லது அவனில் பத்து நிமிடங்கள் வைத்து எடுத்துச் சாப்பிடலாம்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com