தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும், சிறுகதை, புதினம், கட்டுரை என எல்லாக் களங்களிலும் வீரியமிக்க பல படைப்புகளைத் தந்தவருமான சாரு நிவேதிதாவுக்கு இந்த ஆண்டின் க்ராஸ்வேர்ட் புக் விருது வழங்கப்பட்டுள்ளது.
சாரு நிவேதிதா எழுதிய Conversations with Aurangzeb என்ற நாவல், மொழிபெயர்ப்புப் பிரிவில் க்ராஸ்வேர்ட் புக் விருது பெற்றுள்ளது. வாசகர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் இந்தப் புத்தகம் விருதுக்குத் தேர்வுபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 'நான்தான் ஔரங்கசீப்' என்ற தலைப்பில் வெளியான நாவலின் மொழிபெயர்ப்பே 'Conversations with Aurangzeb' இந்நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் நந்தினி.
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் இருவருக்கும் தென்றலின் வாழ்த்துகள். |