மாமனார் ஒருவர் இருந்தார். ஒரு போர்வீரனாக வெளிநாட்டுக்குப் போயிருந்த தன் மருமகன், தனக்கும் தன் மகளுக்கும் கடிதம் எழுதவில்லை என்று அவருக்குக் கோபம். எனவே அவர் மருமகனுக்கு ஆத்திரத்தில் ஒரு கடிதம் எழுதினார்: "எங்களைப் பொறுத்தவரையில் நீ செத்துப் போனது போலத்தான். ஏனென்றால் உன் மனைவிமேல் உனக்கு அக்கறை இல்லை. அவள் தலையை மொட்டை அடித்துக்கொண்டு, விதவைக்கான ஆடைகளை அணிகிறாள்." இந்தக் கடிதம் வந்ததும் போர்வீரன் வாய்விட்டு உரக்க, "என் மனைவி விதவையாகி விட்டாள்" என்று அழுதான். தான் உயிரோடு உள்ளவரை அந்தக் கஷ்டம் அவளுக்கு வராது என்பதை அவன் உணரவில்லை.
பகுத்தறிவு இல்லாமல் ஏதோ முடிவுக்கு வராதே. உன் அனுபவத்தின் மதிப்பை அலட்சியம் செய்யாதே. உனது சொந்த பலத்தில் நில். புகழ்ச்சி மற்றும் இகழ்ச்சியால் அலைக்கழிக்கப் படாதே.
நன்றி: சனாதன சாரதி, அக்டோபர் 2024
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா |