ஒரு குழந்தை இறக்கும்போது, உங்களை நீங்களே ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்: "அது பிறந்தது எனக்காகவா?" என்று. குழந்தை தனது விதியை வாழ்ந்து முடிக்க வேண்டியிருந்தது, அவனுக்கென ஒரு வரலாறு இருந்தது.
கௌதம புத்தரின் தந்தை தன் மகன் பிச்சைப் பாத்திரத்துடன் தெருவில் நடப்பதைக் கண்டு வருந்தினார். மகனிடம், "என் மூதாதையர் யாவரும் அரசர்கள். இந்த வரிசையில் ஒரு பிச்சைக்காரன் வந்து பிறந்தது என்ன துரதிர்ஷ்டம்!" என்றார்.
அதற்கு புத்தர், "என் முன்னோர் ஒவ்வொருவரிடமும் ஒரு பிச்சைப் பாத்திரம் இருந்தது. என் குலத்தில் எந்த அரசனையும் நான் அறியேன்" என்றார்.
தந்தையும் மகனும் வெவ்வேறு பாதைகளில் நடந்தனர், வெவ்வேறு பாதைகளில் பயணம் செய்தனர்.
நன்றி: சனாதன சாரதி, செப்டம்பர் 2024
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா |