கர்வபங்கம் அல்லது அகங்காரத்தை பகவான் அடக்கிய கதைகள் பலவற்றை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஒருநாள் ஆஞ்சநேயர் துவாரகையின் புறநகர்ப் பகுதியில் ஒரு தோட்டத்தில் தோன்றினார். அந்த விசித்திரமான குரங்கின் சேட்டைகளைப்பற்றிக் கேள்விப்பட்ட கிருஷ்ணர், கருடனிடம் அந்தக் குரங்கை மிரட்டிவிட்டு வருமாறு கட்டளையிட்டார். கருடனால் அவரை மிரட்ட முடியவில்லை. அவன் முழு ராணுவத்தையும் தன்னுடன் அழைத்துச் சென்றான். அதிலும் தோல்வியுற்றான்.
தன்னை ஆஞ்சநேயர் என்று அறிவித்துக் கொண்டது அந்தக் குரங்கு. அவர் தனது அரசவைக்கு வரவேண்டும் என கருடன்மூலம் ஒரு செய்தியைக் கிருஷ்ணர் அனுப்பினார். ஆனால் ஆஞ்சநேயர் ராமரை மட்டுமே அங்கீகரிப்பார், அவரது கட்டளைக்கு மட்டுமே கட்டுப்படுவார். எனவே, ராமர் அவரை தர்பார் மண்டபத்திற்கு அழைக்கிறார் என்று கிருஷ்ணர் மற்றொரு செய்தியை அனுப்ப வேண்டியிருந்தது! பக்தி பகவானை அவரது அடியார்களின் விருப்பத்துக்கு இணங்கும்படிக் கட்டாயப்படுத்துகிறது. ஆஞ்சநேயர் ராமரைக் காண விரைந்தார்; கிருஷ்ணர் அவருக்கு ராமராக தரிசனம் கொடுத்தார்!
நன்றி: சனாதன சாரதி, ஆகஸ்ட் 2024
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா |