தேவையான பொருள்கள்
ஆப்பிள் - 5 இஞ்சி - 1 விரல் அளவு சர்க்கரை - 2 கிண்ணம் சிட்ரிக் ஆசிட் - சிறிது முந்திரிப்பருப்பு - 6 நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை
இஞ்சியுடன் தோல் சீவிய ஆப்பிள் துண்டங்களைப் போட்டு மிக்சியில் நன்றாக அரைத்து நெய் விட்டு வதக்கவும்.
சர்க்கரையை அடுப்பில் பாத்திரத்தில் போட்டு பாகு தயார் செய்யவும்.
பாகு நன்றாக கொதிக்கும் போது அரைத்த விழுதைப் போட்டு ஒரு கொதிவிடவும்.
சேர்ந்து கொதித்ததும் இறக்கி வைத்து சிட்ரிக் ஆசிட் சேர்க்கவும். முந்திரி பருப்பை சிறியதாக நறுக்கி நெய்யில் வறுத்துப் போடவும்.
ஆறியதும் பாட்டிலில் எடுத்து வைக்கவும். இது மிக்க சுவையாய் இருக்கும்.
தங்கம் ராமசாமி |