உடைந்த பானைகள்
முன்னொரு காலத்தில் ஒருவர் தனது மகளின் திருமண ஊர்வலத்திற்கு வயதான யானை ஒன்றை வாடகைக்கு அமர்த்தினார். ஊர்வலம் வீடு திரும்பியபோது, மணமகள் அம்பாரியில் இருந்து இறங்கிய உடனே யானை தடாலென்று விழுந்து இறந்தது.

யானையின் உரிமையாளர் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். அதை ஒரு தவிர்க்க முடியாத துயர சம்பவமாக எடுத்துக்கொள்ள அவர் மறுத்துவிட்டார். அதே யானையை உயிருடன் திருப்பித் தரவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்காக அவர் நீதிமன்றம் சென்றார். நீதிபதி கதவின் பின்புறத்தில் சில மண்பானைகளை வைத்திருந்தார். பேராசை பிடித்த உரிமையாளர் உள்ளே செல்வதற்காகத் தடாலென்று அதைத் திறந்தார். அவர் அதைத் திறந்ததும் பானைகள் எல்லாம் உடைந்துவிட்டன. அதே பானைகளைத் திரும்பத் தரவேண்டும் என்று நீதிபதி வற்புறுத்தினார்!

இப்படியாக அந்த ஆசாமிக்கு புத்தி புகட்டப்பட்டது.

நன்றி: சனாதன சாரதி, ஜூலை 2024

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா

© TamilOnline.com