காசியில் ஒரு மருத்துவர் இருந்தார், அவர் காலையில் 5 நிமிடங்களும் மாலை 5 நிமிடங்களும் கடவுளை தியானிப்பதில் செலவிட்டார். இதை அறிந்த அவரது சகாக்களும் நண்பர்களும் அதை முட்டாள்தனம் என்று கூறிச் சிரித்தனர். அவர் தவறான நம்பிக்கையின் காரணமாக விலைமதிப்பற்ற பத்து நிமிடங்களை வீணடிக்கிறார் என்று அவர்கள் வாதிட்டனர். அதற்கு டாக்டர், "சரி, கடவுள் இல்லை என்றால், நான் ஒரு நாளைக்குப் பத்து நிமிடங்களை வீணடிக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஒருவேளை அவர் இருந்தால்! (அவரை நினைக்காமல்) உங்கள் முழு வாழ்க்கையையே வீணடிக்கிறீர்களே. வாழ்நாள் முழுவதையும் வீணாக்குவதை விடப் பத்து நிமிடங்களை வீணாக்குவதையே நான் விரும்புகிறேன். அதிலிருந்து நான் பெறும் பத்து நிமிட மகிழ்ச்சிக்கு நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்? நான் உங்கள் மகிழ்ச்சியைத் திருடவில்லை. என் மகிழ்ச்சியை நீங்கள் ஏன் திருட வேண்டும்?" என்று கேட்டார்.
சந்தேகப் பிராணிகளின் வாய் அடைக்கப்பட்டது.
நன்றி: சனாதன சாரதி, ஜூன் 2024
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா |