தெரியுமா: அமெரிக்காவில் கிரியின் முதல் கிளை
கிரி தனது முதல் கிளையை அமெரிக்காவில் நிறுவியுள்ளது. 70 வருடப் பாரம்பரியமிக்க கிரி நிறுவனம் தற்போது கலிஃபோர்னியாவிலுள்ள சன்னிவேலில் தனது முதல் கிளையை நிறுவியுள்ளது. சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு நமது பாரத கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டு வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.

சென்னை 14 ஜூன் 2024: பாரம்பரிய மற்றும் ஆன்மீகப் பொருட்களின் விற்பனையில் முன்னிலை வகித்துவரும் கிரி நிறுவனம் தற்போது கலிஃபோர்னியாவிலுள்ள சன்னிவேலில் முதல் கிளையை பிரம்மாண்டமாக நிறுவியுள்ளது. அமெரிக்காவில் பரந்துபட்டிருக்கும் பாரத கலாச்சாரத்தின் மீது பற்றுக் கொண்டவர்களுக்கும் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கும் அனைத்துவித தரமான மற்றும் பல்வகைப்பட்ட ஆன்மீக மற்றும் பாரம்பரியப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த விரிவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூடுதலாக எங்களின் வலுவான ஆன்லைன் வாணிபத்தின் மூலம் உலகளாவிய வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடிகிறது.



இந்தப் புதிய ஷோரூமில் வாடிக்கையாளர்களின் தேவைக்காக கிரியின் சொந்தத் தயாரிப்புகளான புத்தகங்கள், பூஜைப் பொருட்கள், விழாக்காலப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், விக்கிரகங்கள், பொம்மைகள், யந்திரம் போன்ற பல தரமான பொருட்களை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தருணத்தில் கிரி Inc. CEO திரு ரங்கநாதன் அவர்கள் பேசுகையில், ஐக்கிய மாநிலங்களில் கிரி தடம் பதித்தது சிலிர்ப்பான அனுபவம் என்றும் பாரதத்தின் உயர்ந்த பாரம்பரியத்தை ஒவ்வொரு தனி நபருக்கும் கொண்டுசெல்லும் குறிக்கோளில் குறிப்பிடத்தக்க மைல் கல்லை அடைந்திருக்கிறது என்றும் கூறினார்.

கிரியைப் பற்றி:
1951 ஆம் ஆண்டிலிருந்து சேவையில் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகம், தெலுங்கானா, புதுச்சேரி, மகாராஷ்டிரம் மற்றும் புது டெல்லி என்று இந்திய மாநிலங்களில் 35 ஷோரூம்களுடன் விளங்கும் கிரி நிறுவனம் தற்போது அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐக்கிய ராஜ்யம், ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிலும் தடம் பதித்துள்ளது. 2019ல் கிரி நிறுவனம் 'The Best Tourist Friendly Shopping Centre in Tamilnadu' என்ற விருதைப் பெற்றது.

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும்:
Ms. Thamizhamuthu Pari - 8838637258 / pr@ticknetwork.in

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com