பிப்ரவரி 'தென்றல்' இதழில், தமிழ்த்தேனீ என்று பட்டம் பெற்றுள்ள, தமிழ் விக்கியில், கல்வித்துறை சார்ந்த ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ள முனைவர் ப. சரவணன் நேர்காணல் அருமை.
இசை உலகில் பற்பல சாதனைகளைச் செய்த, பலவிதத்திலும் முன்னோடியாக இருக்கின்ற மணக்கால் ரங்கராஜன் அவர்களைப் பற்றிய தகவல்களும், ஆவணங்களும் மிக அற்புதம். ஆர்னிகா நாசர் அவர்களின்பல படைப்புக்களை நான் படித்துள்ளேன் .அவர் சொல்ல வந்த விஷயத்தை ,சொல்வதற்கு உபயோகிக்கும் வார்த்தைகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். தனித்துவமான எழுத்தாளர். அவரின் சிறுகதை தாயாரம்மா மிகவும் சுவாரசியம்.
அலமாரிப் பகுதியில் கி .வா. ஜகந்நாதன் விடைகள் நூல்களிலிருந்து வெளியிட்ட கேள்வி பதில்கள் அருமை. மிக எளிமையாகவும் புரியும்படியாகவும் விளக்கமாகச் சொல்லியுள்ளார். காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை அநுபவம் வியப்பான தெய்வீக விஷயம்.
சசிரேகா சம்பத்குமார், யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா |