தேவையான பொருட்கள்
பாதாம் அரைத்த விழுது - 2 கிண்ணம் முந்திரி அரைத்த விழுது - 1 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 2 கிண்ணம் சுண்டிய பால் (condensed milk) - 2 டப்பா முந்திரி (பொடித்தது) - 1 கிண்ணம் சர்க்கரை - 4 கிண்ணம் நெய் - 2 கிண்ணம் கிராம்புத் தூள் - ஒரு சிட்டிகை குங்குமப்பூ, ஏலப்பொடி - ஒவ்வொரு சிட்டிகை பாதாம் (அ) ரோஸ் எசன்ஸ் - 1 துளி
செய்முறை
பாதாம் விழுது கடையில் கிடைப்பதுகூட வாங்கிக் கொள்ளலாம். முந்திரி மட்டும் அரைத்து சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய்த் துருவல், சுண்டிய பால், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, கிராம்புத் தூள், குங்குமப்பூ சேர்த்து, அடி கனமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டுக் கிளறவும்.
நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கொண்டே கிளறவும்.
பாதியில், பொடித்த முந்திரி போட்டு, எசென்ஸ் 1 துளிவிட்டு கேக் பதம் வரும்வரை கிளறவும். நெய் தேவையானால் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
கெட்டியாக, கேக் பதம் வரும்வரை கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டு துண்டாக வெட்டவும்.
இப்போது அருமையான பாதாம் கேக் தயார்.
குறிப்பு:
இந்த அளவிற்குத் தொண்ணூறு வில்லைகள் வரும். தேவைக்கேற்ப அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். |