இலக்கிய மாமணி விருது
மரபுத் தமிழ், ஆய்வுத் தமிழ், படைப்புத் தமிழ் எனத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் படைப்புகளைப் படைத்தும், பன்முக நோக்கில் தொண்டாற்றியும் வரும் மூன்று தமிழ் அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் இலக்கியமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 மற்றும் 2023க்கான இலக்கிய மாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2022ம் ஆண்டு விருது பெறுவோர்
பேராசிரியர், முனைவர் அரங்க ராமலிங்கம் (மரபுத்தமிழ்)
கொ.மா. கோதண்டம் (ஆய்வுத் தமிழ்)
எழுத்தாளர் சூர்யகாந்தன் (படைப்புத் தமிழ்)
கருணாநிதி நுாற்றாண்டு பிறந்த நாளையொட்டிய சிறப்புத் தேர்வு விருதாளர்கள்
மணி அர்ஜுனன் (மரபுத் தமிழ்)
திருவிடம் (ஆய்வுத் தமிழ்)
பேராசிரியர் க. பூரணச்சந்திரன் (படைப்புத் தமிழ்)
2023ம் ஆண்டு விருது பெறுவோர்
ஞா. மாணிக்கவாசகன் (மரபுத் தமிழ்)
பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் (ஆய்வுத் தமிழ்)
கவிஞர் இலக்கியா நடராசன் (படைப்புத் தமிழ்)

விருதுத்தொகை ரூபாய் ஐந்து லட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை கொண்டது இந்த விருது.

விருதாளர்களுக்குத் தென்றலின் நல்வாழ்த்துக்கள்!

© TamilOnline.com