திடீர் ரசம்
தேவையான பொருட்கள்

திடீர் புளி - 1/4 தேக்கரண்டி
தக்காளி(நறுக்கியது) - 1/2 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
ரசப்பொடி - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 சிட்டிகை
கொத்துமல்லி இலை - சிறிதளவு

செய்முறை

மேலே கண்டவற்றை 1 கிண்ணம் தண்ணீரில் கரைத்து மேல் தட்டில் வைக்கவும். பின்னர் குக்கரை அதன் மூடியால் மூடி விடவும். ஒரே சீராக ஆவி வந்த பின்பு குக்கர் வெயிட்டைப் போட்டு 4 சத்தம் வந்த பின்பு அடுப்பை அணைக்கவும்.

பிரஷர் தானாக அடங்கிய பின்பு, குக்கரைத் திறக்கவும். இப்போது குழம்பு, ரசம் இவற்றைச் செய்து முடிக்க வேண்டும்.

குழம்பு வைத்துள்ள குக்கர் தட்டை கவனமாக எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதி வந்த உடன் 1 கிண்ணம் வெந்த துவரம் பருப்பைச் சிறிது தண்ணீருடன் கரைத்து கொதிக்கும் குழம்பில் விட்டு தளதள எனக் கொதிக்க விடவும். 1/2 தேக்கரண்டி கடுகு, 1/8 தேக்கரண்டி வெந்தயம் தாளித்துக் கொட்டி அடுப்பிலிருந்து இறக்கினால் குழம்பு தயார்.

குழம்பை அடுப்பில் வைக்கும்போதே இன்னொரு அடுப்பில் ரசமும் வைத்து விடலாம்.

ரசப்பொருட்கள் வைத்துள்ள குக்கர் தட்டைக் கவனமாக எடுத்து ஒரு பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைத்து, கொதி வந்த உடன் 1/2 கிண்ணம் வெந்த துவரம் பருப்பை 1 கிண்ணம் தண்ணீரில் கரைத்துக் கொதிக்கும் ரசத்தில் விட்டு அடி மேலாகக் கலக்கி விடவும்.

ரசம் நுரைத்துப் பொங்கி வரும் போது (கொதிக்க விடக்கூடாது) 1/2 தேக்கரண்டி கடுகைச் சிறிது நெய்யில் தாளித்து கொட்டவும். ரசப்பொடி இல்லையெனில் சாம்பார் பொடியை உபயோகிக்கலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com