தமிழக அரசு விருதுகள்
ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ்ச் சான்றோர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டில் கீழ்க்காணுவோர் விருது பெறுகின்றனர்.

அய்யன் திருவள்ளுவர் விருது - பாலமுருகனடிமை சுவாமிகள்
பேரறிஞர் அண்ணா விருது - பத்தமடை பரமசிவம்
பெருந்தலைவர் காமராசர் விருது – உ. பலராமன்
மகாகவி பாரதியார் விருது – பழநிபாரதி
பாவேந்தர் பாரதிதாசன் விருது - ம. முத்தரசு
தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது - எஸ். ஜெயசீல ஸ்டீபன்
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - முனைவர் இரா. கருணாநிதி
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது - சுப வீரபாண்டியன்
அம்பேத்கர் விருது – சண்முகம்

விருதாளர்கள் விருது தொகையாக ரூ.5 லட்சமும், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரையும் பெறுகின்றனர்.

விருதாளர்களுக்குத் தென்றலின் நல்வாழ்த்துக்கள்!

© TamilOnline.com