சென்னையில் அயலகத் தமிழர் நாள்
தமிழக அரசின் 'அயலகத் தமிழர் நல வாரியம்' என்பது வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின், குறிப்பாக பாரத நாட்டின் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் நலனுக்கான அமைப்பாகும். இது சட்டம், கலாச்சாரம், சமூக ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு உதவி செய்கிறது.

மூன்றாவது முறையாக உலகத்தமிழர் ஒன்றுசேரும் மாபெரும் நிகழ்வை வெளிநாடுவாழ் தமிழர்கள் தினம் என்று சென்னையில் ஜனவரி 12, 13, (மார்கழி 27, 28) தேதிகளில் கொண்டாடப்படவுள்ளன.

உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு மற்றும் சாதனைகளைச் சிறப்பிக்கவும் அங்கீகரிக்கவும் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் இந்த நிகழ்வு, தமிழர் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மரபுகளை வெளிப்படுத்தும் ஒரு களமாகச் செயல்படும். இந்த விழாவின் நிகழ்ச்சிகள் கலை, இலக்கியம், பகுத்தறிவு, பொருளாதாரம், வரலாறு குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் உலகளாவிய தமிழ்ச் சமூகத்தை ஒன்றிணைத்து அவர்களின் அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் கொண்டாடும் நிகழ்வுகளை உள்ளடக்கி இருக்கும்.

இந்த இணைப்பைப் பயன்படுத்தி, நிகழ்விற்கு உங்கள் வரவினைப் பதிவு செய்யவும்

பதிவு செய்வோர் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத் தலைவர்/செயலருக்குத் தகவல் தெரிவிக்கவும். நீங்கள் மன்றத்தின் பிரிதிநிதியாக விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு இருக்கிறது.

தொடர்புக்கு மின்னஞ்சல் முகவரிகள்:
president@sfbatm.org, secretary@sfbatm.org

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com