சுவாமி சுகபோதானந்தா அமெரிக்க நிகழ்ச்சிகள்
ஆன்மீக குருவான சுவாமி சுகபோதானந்தா அவர்கள் அக்டோபர் 13 முதல் 29 வரை அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் பல நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறார். விவரம் பின்வருமாறு

மெம்பிஸ் TN - அக். 13 - 15
ஃப்ரிஸ்கோ, TX - அக். 21, 22
கூப்பர்டினோ, CA - அக். 29

சுவாமிஜி மிகச்சிறந்த ஆன்மீக குரு மட்டுமல்ல, 'பெருநிறுவன குரு' என்ற செல்லப் பெயரும் அவருக்கு உண்டு. சுவாமிஜி வழங்கும் பயிற்சி வகுப்புகள் மன அமைதி , செழுமை பற்றியவையும், மேலாண்மை, நிதி மேலாண்மை மற்றும் உளவியல் பற்றியவையும் ஆகும்.

சுவாமிஜியின் இந்த அமெரிக்க சுற்றுப்பயணத்தில் நவராத்திரி கொண்டாடும் வழி எப்படி நமக்கு வாழ்க்கையின் அடிப்படைகளைக் கற்றுத் தருகிறது என்பதை, அவரது சொற்பொழிவுகள், பட்டறைகள் மூலம் சொல்ல இருக்கிறார்.

சுவாமிஜி அவர்களின் தொலைநோக்குப் பார்வை, இரண்டு வெற்றிகளை நமக்கு தெளிவு படுத்துகிறது: வெளி வெற்றி & உள் வெற்றி (inner winner, outer winner).

சுவாமிஜி பல மொழிகளில் 119 புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் பல சிறந்த விற்பனை சாதனை படைத்தவை. கார்ப்பரேட் நிறுவனங்களிலும் அவர் மிகவும் விரும்பப்படும் பேச்சாளர். கீதை பற்றிய அவரது உரைகள் வாழ்க்கையை மாற்றும் திறன் கொண்டவை. சுவாமிஜியை பிரதமர் நரேந்திர மோதிஜி வங்கி தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பங்குபெறும் சந்திப்பில் உரையாற்ற அழைத்தார். அது மிகுந்த வெற்றி பெறவே, இரண்டாவது முறையும் உரையாற்ற அழைக்கப்பட்டார். சுவிட்ஸர்லாந்தின் உலகப் பொருளாதார மன்றத்தில் பேசவும் சுவாமிஜி அழைக்கப்பட்டார்.

சுவாமி சுகபோதானந்தா அவர்களின் அன்னதானத் திட்டம் 7.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்துள்ளது. 45 கிராமப்புற பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், குடிசைவாழ் மக்கள் ஆகியோர் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

சுவாமிஜி இந்த முறை நவராத்திரியில் தேவி மஹாத்மியம் நூலை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கை முறையை எப்படி ஆனந்த மயமாக்குவது என்பதை விளக்குவார். இதில் வரும் அரக்கர்கள் எல்லாமே நமக்கு வேண்டாத, நம்மைப் பாதாளத்திற்குத் தள்ளும் குணங்களாகும்.

இவை நமது வாழ்க்கையில் மிகப்பெரிய மாறுதலைக் கொண்டுவரும். அனைவரையும் இந்த நிகழ்ச்சிகளுக்கு வந்து பயன்பெற
வேண்டுகிறோம்.

மேற்கொண்டு விபரங்களுக்கு
வலைமனை: www.swamisukhabodhananda.com, www.prasannatrust.org

தொடர்புக்கு
toshakila@gmail.com, vasanthi@prasannatrust.com
தொலைபேசி: 408-613-1892

தகவல்: நூ. சகிலா பானு

© TamilOnline.com