மேடை நாடகம்: சிலப்பதிகாரம்
நவம்பர் 12, 2023 அன்று சாபோட் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் சென்டரில் 'சிலப்பதிகாரம்' அரங்கேற்றப்படுகிறது. இதில் கலைஞர்கள் ஷோபா சுப்பிரமணியன் கண்ணகியாகவும், பிரசன்னா ரவி கோவலனாகவும், ஊர்மி சக்ரவர்த்தி மாதவியாகவும் நடிக்கின்றனர். இந்தக் காதல் காவியம் காலங்காலமாக அதிகம் பேசப்படும் கதை.

கதைச்சுருக்கம்
நாயகி கண்ணகியின் அன்பு, பொறுமை ஆகியவற்றில் தொடங்கி ஒரு தேவி நிலைக்கு அவள் இறுதியாக மாறுவதைப் பற்றியது இந்தக் கதை.



ஆடலழகி மாதவிமீது கொண்ட மோகத்தில் மயங்கிய கோவலன், தன் மனைவி கண்ணகியை விட்டுப் பிரிகிறான். விரைவிலேயே மாதவியின் சூழ்ச்சிகள், பொய்கள், ஆடம்பரமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் கோவலன் தனது பெருஞ்செல்வத்தை இழக்கிறான். கணவன்மீது கொண்ட காதலில் உறுதியாக இருந்த கண்ணகியிடம் அவன் திரும்பினான்.

கண்ணகியின் வேண்டுகோளுக்கு இணங்கக் கோவலன், விலைமதிப்பற்ற ரத்தினங்களால் நிரப்பப்பட்ட கண்ணகியின் கொலுசுகளை விற்கப் பாண்டிய மன்னனின் தலைநகரான மதுரைக்குச் செல்கிறான். இதற்கிடையில், மதுரையில், கண்ணகியைப் போலவே ராணியின் கொலுசுகளைத் திருடிய பொற்கொல்லனும் வஞ்சகமான அமைச்சரும், கோவலன்தான் திருடினான் என்று குற்றம் சாட்டி, நிரபராதி என்பதை நிரூபிக்க வாய்ப்பளிக்காமல் அவன் தலையைத் துண்டித்து விடுகிறார்கள்.

கணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அறிந்த கண்ணகி, மன்னரின் அரசவைக்குள் நுழைந்து, கணவன் குற்றமற்றவன் என்பதை நிரூபித்து, தன் கோபக் கனலால் மதுரை நகரைச் சாம்பலாக்கி விடுகிறாள்.



மேடை வடிவம்: மீனா தாஸ் நாராயண்
நடனம்: குரு திருமதி வீணா மூர்த்தி விஜய்
இசை: மேஸ்ட்ரோ பிரவீன் டி. ராவ்
தொகுப்பு, இயக்கம்: சண்முகா தியேட்டர்ஸ்
கலை இயக்குனர்: ரியான் நாதன் & நவீன் நாதன்
நடிப்பு:
ஷோபா சுப்பிரமணியன் - கண்ணகி
பிரசன்னா ரவி - கோவலன்
ஊர்மி சக்ரவர்த்தி - மாதவி

நாள்: நவம்பர் 12, 2023
நேரம்: மதியம் 2.00 மணி (PST)
நுழைவுச்சீட்டு வாங்க: ticketprism.com
விலை: ஒரு நபருக்கு $ 25 (குழந்தைகள் உட்பட)
இடம்:
சாபோட் கல்லூரி நிகழ்த்து கலை மையம்
25555 ஹெஸ்பீரியன் பொலிவர்டு, ஹேவார்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com