கோவை புத்தகக் காட்சி விருது
கோவையில் நடக்கும் புத்தகக் காட்சியில் ஒவ்வோர் ஆண்டும் சாதனையாளர்கள், எழுத்தாளர்கள் விருதளித்து கௌரவிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான சுகுமாரனுக்கு வழங்கப்படுகிறது. மொழியாக்கத்துக்கான விருது, மகாபாரதம், ஹரிவம்சம், ராமாயணம் போன்றவற்றைத் தமிழில் மொழிபெயர்த்த அருட்செல்வப் பேரரசனுக்கு வழங்கப்படுகிறது. கு. மலர்விழி விருது பெறுகிறார். சிறந்த சிறுகதைக்கான விருதுக்கு எழுத்தாளர் மயிலன் சின்னப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்விருதுகள் ரூ.25,000 பரிசுத்தொகை கொண்டவை. வாழ்நாள் சாதனையாளருக்கான விருது ரூ.1.5 லட்சம்.

விருதாளர்களுக்குத் தென்றலின் வாழ்த்துக்கள்!

© TamilOnline.com