செயிண்ட் லூயியில் தியாகராஜ ஆராதனை
ஜனவரி 30, 2005 ஞாயிறன்று செயிண்ட் லூயியில் (மிசவுரி) வசிக்கும் சுமார் 30 குடும்பத்தினர் சேர்ந்து ஸ்ரீராமர் பூஜை மற்றும் பஞ்ச ரத்னக் கீர்த்தனையுடன் தியாகராஜ ஆராதனை கொண்டாடினர். எழுபத்தைந்து வயதான மீனாட்சி மாமி ஆறு ஆண்டுகளுக்கு முன் தன் வீட்டின் நிலவறையில் நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்னும் இந்தச் சிறிய தமிழ்ச் சமூகத்தில் தொடர்கிறது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் தியாகராஜ கிருதிகளைப் பாடினர். பஜனைப் பாடல்களும் பாடப்பட்டன.

மார்ச் 12, 2005 அன்று இங்குள்ள ஹிந்துக் கோவிலில் சிவராத்திரி விழா கொண்டாடப்படும். நடனப்பள்ளிகள் கலந்துகொள்ளும் இந்த இந்தியச் செவ்வியல் நடன நிகழ்ச்சியை லாபநோக்கற்ற சேவை நிறுவனமான 'அபிநயா' ஏற்று நடத்துகிறது.

© TamilOnline.com