நீரின் மொழி
மாந்தர்தமை வாழவைக்கும்
மாசில்லா நீர்ப்பெருக்கு
தாகத்தைத் தீர்ப்பதுடன்
வாழ்வியலும் மொழிந்திடுமாம்!

இருகரைக்குள் ஓடியுமே
அடக்கத்தை அறிவுறுத்தி
நல்வழியில் நடந்திடவே
சொல்லாமல் சொல்லிடுமாம்!

தடைகள் எதிர்வரினும்
தூசாகப் புறந்தள்ளி
வேகநடை போட்டு
வெற்றியை எட்டுகென
தன்நடையால் உணர்த்திடுமாம்!

தன் வலிமை, திறனறிதல்
தலையாய கடமையென
தான் வளர்க்கும் மக்களுக்குத்
தன் இயல்பால் சுட்டிடுமாம்!

கமலா பார்த்தசாரதி,
சென்னை

© TamilOnline.com