மஹாகவி பாரதியார் பிறந்தநாள் விழா
ஆறாவது ஆண்டாக, ஸ்ருதிஸ்வரா ஸ்கூல் ஆஃப் மியூசிக், நியூ ஜெர்சி மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாள் விழாவை டிசம்பர் 11, 2022 அன்று ஆன்லைனில் சிறப்புடன் நடத்தியது. இந்த வருடம் முதல் முறையாக சம்பதா (SAMPADA - Silicon Andhra Music Performing Arts & Dance Academy) உடன் சேர்ந்து விழாவை நடத்தியது.

நிரஞ்சன் பாரதியோடு உரையாடல்



கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சியை ஸ்ருதிஸ்வரா இசைப்பள்ளி இயக்குனர் திருமதி. நிர்மலா ராஜேஷ் இனிதாகத் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக பாரதியாரின் எள்ளுப் பேரன் திரு. நிரஞ்சன் பாரதி பங்கேற்றுச் சிறப்பித்தார். பாரதியார் குறித்த பழைய நினைவுகளை சுவைபடப் பகிர்ந்துகொண்டார். சுமார் நூற்றுக்கும் மேலான குழந்தைகள் அமெரிக்காவின் அனைத்துப் பகுதியிலிருந்தும் பங்குபெற்று பாரதியின் பாடல்களை இசைத்தும், அவற்றுக்கு நடனமாடியும் பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

நிர்மலா ராஜேஷ் & ராஜேஷ் நாதன்



இறுதியாக திருமதி. சாருலதா ராமானுஜம் அவர்களின் வயலின் இசை காதுக்கு விருந்தாக அமைந்தது. சம்பதா இளைஞர் திரு. தீனபாபு கொண்டுபட்லா அவர்கள் நன்றி கூற, திருமதி. நிர்மலாவும் திரு. ராஜேஷும் மங்களம் பாடி இனிதே விழாவை நிறைவு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியைக் காண
இணையதளம் | முகநூல் | இன்ஸ்டாகிராம் | யூட்யூப்

செய்திக் குறிப்பிலிருந்து

மேலும் படங்கள்



© TamilOnline.com