75வது ஆண்டு இந்திய விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ், 75 வயதுக்கு மேற்பட்ட, இதுவரை தேசிய அளவிலான விருதுகளைப் பெறாத கலைஞர்களுக்கு, சங்கீத நாடக அகாதமி, அமிர்த விருதுகளை வழங்குகிறது. தமிழ்நாட்டிலிருந்து கீழ்க்காணும் ஐவர் இவ்விருது பெற்றனர்.
ஆச்சாள்புரம் சின்னத்தம்பி (நாதஸ்வரம்) புரிசை சுப்பிரமணியம் (தெருக்கூத்து) சுந்தரேசன் ராமமூர்த்தி (நாடக நடிகர்) வி.ஏ.கே. ரங்காராவ் (நடனம்) ஆர். ரமணி (வீணை இசை)
புதுச்சேரியைச் சேர்ந்த நாடக இசைக் கலைஞர் கே.எம். சுப்பையா, பொம்மலாட்டக் கலைஞர் வீராசாமி சீனிவாசன் ஆகியோரும் இவ்விருது பெறுகின்றனர்.
விருதாளர்களுக்குத் தென்றலின் நல்வாழ்த்துகள் |