தமிழக அரசு, தமிழின் சிறந்த இலக்கியவாதிகளைச் சிறப்பிக்கும் வகையில் 'கனவு இல்லம்' திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டு எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் அல்லது அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படுகிறது.
அவ்வகையில் 2022-2023ம் ஆண்டுக்காக ஜி. திலகவதி, பொன். கோதண்டராமன், சு. வெங்கடேசன், ப. மருதநாயகம், மறைமலை இலக்குவனார், இரா. கலைக்கோவன், எஸ். ராமகிருஷ்ணன், கா. ராஜன், ஜோ.டி. குருஸ், சி. கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்) ஆகியோர் கனவு இல்லத்தைப் பெறத் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, 2021-22ம் ஆண்டுக்காக, எழுத்தாளர்கள் இமையம், ஈரோடு தமிழன்பன், புவியரசு, சுந்தரமூர்த்தி, பூமணி, மோகனராசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகளைப் பெறுவதற்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
கனவு இல்லத்தைப் பெறும் தமிழ் எழுத்தாளர்களுக்கு நல்வாழ்த்துகள்! |