லாஸ் ஏஞ்சலஸில் ஸ்ரீ தியாகப்பிரம்ம உத்ஸவம்
ஜனவரி 29, 2005 அன்று தென் கலி·போர் னியா இந்துக்கோவில் சங்கத்தின் மாலிபூ கோவிலில் ஸ்ரீ தியாகபிரம்ம ஆராதனை விழா நடைபெற்றது.

கானம் சரஸ்வதி, கல்யாணி சதானந்தம், சுபா நாராயண், சங்கரி செந்தில்குமார், வசந்தா பாட்சு, பத்மாகுட்டி, சுனந்தா சந்திரமெளலி, கீதா ராமநாதன் பென்னட், ரோஸ் முரளிகிருஷ்ணன், முரளிகிருஷ்ணன், திருவையாறு கிருஷ்ணன், டெல்லி சுந்தர் ராஜன் ஆகியோரும் அவர்களது சிஷ்யர் களும் தியாகராஜர், பாபநாசம் சிவன் மற்றும் பலர் இயற்றிய பாடல்களைப் பாடியும், தவில், மிருதங்கம், வீணை, வயலின், கீபோர்டு போன்ற இசைக்கருவிகளை வாசித்தும் ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தினர்.

லாஸ் ஏஞ்சலஸின் சுற்றுவட்டாரங்களி லிருந்து திரண்டிருந்த இசைகுருக்கள் மற்றும் அவர்களது சீடர்கள் இணைந்தமர்ந்து தியாகராஜரின் புகழ்பெற்ற பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடினர். தொடர்ந்து நாதஸ்வரமும், கிளாரினெட்டும் (செல்வி சங்கீதா) லியோனைஸ் அவர்களின் தவிலுடன் அமர்க்களமாய் இசைத்தன.

இவ்விழாவின் சிறப்பம்சம் வாத்திய விருந்து. காலை 11.30 தொடங்கி இரவு 8 மணிவரை பொழிந்தது இடைவிடாத இசைமழை. இந்துக்கோவில் சங்கம் இசை ஆசான் களுக்குப் பொன்னாடை அணிவித்து கெளரவித்தது அருண் சங்கரநாராயணன் நன்றியுரை வழங்கினார்.

புவனேஸ்வரி

© TamilOnline.com