SIFAவின் தியாகராஜ ஆராதனை
ஜனவரி 29, 2005 அன்று தியாகராஜ ஸ்வாமி களின் ஆராதனையுடன், தென்னிந்திய நுண்கலைகள் (SIFA-South India Fine Arts, San Jose) தனது இருபத்தி ஆறாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்தது. காலை எட்டரை மணிக்குச் சம்பிரதாயமாகப் பஞ்சரத்ன கீர்த்தனைகளை விரிகுடாப் பகுதிக கலைஞர்கள் பாட நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் பொதுப் பாடல் நிகழ்ச்சியில் ஏழு வயதுச் சிறுமி முதல், எழுபது வயதுப் பெரியவர் வரை ஒவ்வொருவரும் திறமை யுடனும், நேர்த்தியுடனும் பாடினர்.

முன்பெல்லாம் தனியாகப் பாடும் பலரும் இந்த முறை பக்கவாத்தியத்துடன் பாடியதும், ஒன்றிரண்டாக இருந்த வீணை பலவாகப் பெருகியிருப்பதும், மகிழத்தக்க முன்னேற்றங்கள். இந்த அற்புத வளர்ச்சிக்கு சி·பா அரங்கம் அமைத்துக் கொடுப்பது பாராட்டத் தக்கது.

அடுத்த நிகழ்ச்சி:

பிப்ரவரி 13 அன்று இளம் கலைஞர்களான ரூபா சாஸ்த்ரி, ராம் நாராயண், ராஜா சிவமணி, ரீமா நாத் போன்றோரின் கார்நாடக இசையும், நசிகேத ஷர்மாவின் ஹிந்துஸ் தானிக் கச்சேரியும் நடைபெற உள்ளன.

மேலும் விவரங்களுக்கு: http://www.southindiafinearts.org

பத்மப்ரியன்

© TamilOnline.com