விரிகுடாப் பகுதியின் பிரபல 'அபிநயா நடனக் குழுமம்' தனது வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தை மார்ச் 19 மற்றும் 20-ம் தேதிகளில் தென்னிந்தியாவின் பரதநாட்டியம் மற்றும் குச்சிபுடி நாட்டிய நிகழ்ச்சிகளோடு துவக்குகிறது. வசந்தக் கச்சேரிகளான இவை சான்டா கிளாரா பல்கலைக் கழகத்தின் லூயி பி. மேயர் அரங்கத்தில் இரண்டு நாட்களிலும் மாலை 4:00 மணிக்குத் தொடங்கும்.
முதல்நாளான சனிக்கிழமையன்று அபிநயா வின் கலை இயக்குனரான மைதிலி குமாரின் தனி நடனமும், அடுத்த தலைமுறையின் மாளவிகா மற்றும் அபிநயா நடனமணிகளின் குழு நடனமும் இடம்பெறும். மறுநாளன்று மாணவர்களின் 'கவர்ந்திழுப்பான் கண்ணன்' (Krishna the Enchanter) என்று நிகழ்ச்சி நடைபெறும்.
இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ஆஷா ரமேஷ் (குரலிசை), என். நாராயண் (மிருதங்கம்), சாந்தி நாராயண் (வயலின்) மற்றும் வைதேஹி யெல்லை (நட்டுவாங்கம்) ஆகியோர் பின்னணி வழங்குவர். ஏழிலிருந்து பதினெட்டு வயதுவரையிலானோர் இதிலே ஆயர்பாடிக் கண்னனின் அற்புத லீலைகளை நடனத்தில் சித்தரிப்பர்.
மேலும் விவரங்களுக்கு: www.abhinaya.org |