நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கரிக்கையூர் கிராமத்தைச் சேர்ந்த காளியம்மாளுக்கு, மத்திய கலாசாரத்துறை சார்பில் 'தன்வந்தரி' விருது வழங்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய மூலிகைகளைப் பற்றி விரிவாக அறிந்திருக்கும் காளியம்மாள், அம்மூலிகைகளைக் கொண்டு பழங்குடி இன மக்களின் நோய்கள் தீர உதவி வருகிறார். பழங்குடியினரின் பாரம்பரிய மூலிகைகளைக் காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இவர், தனியார் அறக்கட்டளை மூலிகை மருந்து உற்பத்திக் குழுவின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். ஆயுர்வேதப் பார்வை-2047 என்ற தலைப்பில் பெங்களூருவில் சமீபத்தில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் காளியம்மாள் பங்கேற்றார். அந்நிகழ்வில் மத்திய கலாசாரத் துறையின் சார்பில் தேசிய அளவிலான 'தன்வந்தரி' விருதை, அதன் தலைவர் டாக்டர் ஹரிராமமூர்த்தி வழங்கிச் சிறப்பித்தார்.
காளியம்மாளுக்குத் தென்றலின் நல்வாழ்த்துகள்! |