தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு 'இலக்கிய மாமணி' என்ற விருதினைத் தருகிறது. தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூவருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 2021க்கான இலக்கிய மாமணி விருது கு. சின்னப்ப பாரதி (அமரர்), எழுத்தாளர் கோணங்கி, புலவர் இரா. கலியபெருமாள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் அடங்கியது இவ்விருது.
|