ஆசைகள் நம்மைக் கட்டிப் போடுகின்றன
குரங்கு பிடிப்பவர்கள் ஒரு வாய் சிறுத்த பானைக்குள் இனிப்புப் பண்டங்களைப் போடுவார்கள். தீனிக்கு ஆசைப்பட்ட குரங்கு பானைக்குள் கையை விட்டு, தின்பண்டங்களைக் கைப்பிடி அளவு எடுக்கும். கையைப் பானைக்குள் இருந்து அதன் குறுகிய வாய்வழியே குரங்கினால் வெளியே எடுக்க முடியாது. கையில் இருப்பதை விட்டால்தான் குரங்கின் கை வெளியே வரும். தின்பண்டத்தின் மீதான ஆசையில் அதன் கைகள் மாட்டிக்கொள்கின்றன. ஆசையைத் தீர்த்துக்கொள்ளக் கை நிறையத் தீனியை எடுத்ததால் அதன் கை சிக்கிக் கொண்டது.

இந்தப் பரந்த உலகமே பானை, நமது 'சம்சாரம்' அல்லது குடும்பமே அதன் குறுகிய வாய். பானைக்குள் இருக்கும் இனிப்பு நமது ஆசைகள். ஆசைகள் என்னும் இனிப்புப் பண்டங்களைக் கொண்ட உலகம் என்னும் பானைக்குள் மனிதன் கையை நுழைக்கிறான். ஆசைகளை விட்டுவிட்டால் அவனால் உலகத்தில் சுதந்திரமாக வாழ முடியும். சுதந்திரம் பெறுவதற்கு அவன் முதலில் செய்ய வேண்டியது தியாகம்தான். வேதாந்தமாகச் சொன்னால் இதுவே துறவு. உலகம் நம்மைக் கட்டிப் போடுவதாக நாம் நினைக்கிறோம், ஆனால் உலகம் ஜடம். ஆசைகள்தாம் நம்மைக் கட்டிப் போடுகின்றன.

நன்றி. சனாதன சாரதி, ஏப்ரல் 2022

பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா

© TamilOnline.com