'சந்திரமுகி' படத்தின் பாடல் ஒலிப்பேழை சென்னையில் மார்ச் 5ஆம் தேதி வெளியிடப் படுகிறது. இதற்கிடையில் சிவாஜி புரொடக் ஷன்ஸ் நிறுவனமும், டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா டெலிசர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கிடையே கூட்டு உருவாகி யுள்ளது. இனி இப்படம் "டாடா இன்டிகாம் மற்றும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும் சந்திரமுகி" என்றே விளம்பரம் செய்யப்படும் என்று விவரமறிந்த வட்டாரம் கூறுகிறது. தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமான கட்அவுட்கள், விளம்பரப் பலகைகள், பேனர்கள் என்று அமர்க்களப் படுத்தப் போவதாகத் தெரிகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆஷா போஸ்லே சந்திரமுகிக்காகத் தமிழ்ப் பாடல் பாடுகிறார். அதுமட்டுமல்ல, 25 வருடங் களுக்கு முன் மலையாளப் படவுலகைக் கலக்கிய 'செம்மீன்' படநாயகி ஷீலா, 'சந்திரமுகி' வழியே தமிழில் மீண்டும் காலடி எடுத்து வைப்பதோடு, முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கவிருக்கிறார்.
தொகுப்பு: கேடிஸ்ரீ |